செல்பி எடுக்க முயன்ற போது 140 அடி உயர நீர்வீழ்ச்சி குகையில் தவறி விழுந்த வாலிபர்


செல்பி எடுக்க முயன்ற போது 140 அடி உயர நீர்வீழ்ச்சி குகையில் தவறி விழுந்த வாலிபர்
x
தினத்தந்தி 3 Oct 2021 9:28 PM GMT (Updated: 3 Oct 2021 9:28 PM GMT)

செல்பி எடுக்க முயன்றபோது 140 அடி உயர நீர்வீழ்ச்சி குகையில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

பெலகாவி: செல்பி எடுக்க முயன்றபோது 140 அடி உயர நீர்வீழ்ச்சி குகையில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு படையினர் உயிருடன் மீட்டனர்.

நீர்வீழ்ச்சிக்கு சென்றார்

பெலகாவி மாவட்டம் கோகாக்கில் நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்றுலா தலமான இங்கு நேற்று முன்தினம் மாலை பிரதீப் சாகர்(வயது 30) என்ற வாலிபர் தனது நண்பர்களுடன் வந்தார். நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்த பிரதீப், நீர்வீழ்ச்சியின் மேல்பகுதிக்கு சென்று தனது செல்போனில் செல்பி எடுக்க முயன்றார்.

 அப்போது எதிர்பாராதவிதமாக நீர்வீழ்ச்சி அருகே இருந்த 140 அடி உயர குகைக்குள் பிரதீப் தவறி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரதீப்பின் நண்பர்கள் கோகாக் போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் பிரதீப்பை மீட்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் இரவு ஆகிவிட்டது. இதனால் மீட்பு பணியை தொடர முடியவில்லை. இந்த நிலையில நேற்று அதிகாலை 3 மணி முதலே பிரதீப்பை மீட்க தீயணைப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். 

உயிருடன் மீட்பு

அதிகாலை 4 மணியளவில் 140 அடி உயர குகைக்குள் இருந்து பிரதீப்பை தீயணைப்பு படையினர் மீட்டனர். ஆனாலும் உணவு சாப்பிடாததாலும், காயம் ஏற்பட்டதாலும் பிரதீப் சோர்வாக காணப்பட்டார். அவரை தீயணைப்பு படையினர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story