வேலூரில் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வேலூர்
வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் அசேன், வரலட்சுமி, சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசின் 3 வேளாண் திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி உத்தரபிரதேச மாநிலம் லகிம்பூர்கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை கார் ஏற்றி கொலை செய்தவர்களை கண்டித்தும், மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்மிஸ்ராவின் மகன் ஆஷிஷ்மிஸ்ராவிற்கு தூக்கு தண்டனை வழங்கக்கோரியும், இதற்கு காரணமான மத்திய பா.ஜனதா அரசு மற்றும் பிரதமர் மோடி பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story