மாவட்ட செய்திகள்

3 போலீசார் பணியிடை நீக்கம் + "||" + Dismissal

3 போலீசார் பணியிடை நீக்கம்

3 போலீசார் பணியிடை நீக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 கைதிகள் தப்பி ஓடிய விவகாரத்தில் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 
கைதிகள் தப்பி ஓட்டம் 
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த வாகன சோதனையின் போது, ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்ததாக முத்துக்குமார் (வயது 24), அருண் குமார் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் இருவரையும், அருப்புக்கோட்டை சிறைக்கு அழைத்து செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். செல்லும் வழியில் கைதிகள் இருவரும் தப்பி ஓடி விட்டனர்.  போலீசாரின் தொடர் தேடுதலுக்கு பிறகு முத்துக்குமாரை கைது செய்தனர். பின்னர் அருண்குமாரும் பிடிபட்டார். 
3 போலீசார் பணியிடை நீக்கம் 
இந்தநிலையில் கைதிகள் தப்பியது தொடர்பாக, கூமாப்பட்டி போலீஸ் நிலைய ஏட்டுகள் கனகராஜ் (40),  விஜயகுமார், போலீஸ்காரர் ஈஸ்வரன் ஆகிய 3 பேைரயும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை போலீஸ் துறை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி ஆவின் அதிகாரி பணியிடை நீக்கம்
முன்னாள் அமைச்சரின் மகனான திருச்சி ஆவின் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
2. டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம்
திருச்செந்தூரில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் உள்பட 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
3. ரூ.78 லட்சம் மோசடி சம்பவத்தில் கைதான திண்டிவனம் கிளை சிறை ஊழியர் பணியிடை நீக்கம்
ரூ.78 லட்சம் மோசடி சம்பவத்தில் கைதான திண்டிவனம் கிளை சிறை ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
4. ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளர் பணியிடை நீக்கம்
ரேஷன் பொருள் கடத்தலில் சிக்கிய விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
5. கடம்பூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம்
வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் நகைகள் ஏலம் கடம்பூர் கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பணியிடை நீக்கம் மாவட்ட இணைப்பதிவாளர் உத்தரவு