பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை


பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
x
தினத்தந்தி 11 Oct 2021 10:05 PM GMT (Updated: 11 Oct 2021 10:05 PM GMT)

பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை

ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் காமாட்சி கணேசன்(பொ) நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மாவட்ட தீயணைப்பு உதவி அலுவலர் ராஜு தலைமையில் நிலைய அலுவலர் ஜமால் அப்துல்நாசர் உள்ளிட்ட தீயணைப்பு படையினர் ஒத்திகையை செயல்முறை விளக்கமாக செய்து காட்டினர். இதில், மழைவெள்ளம், புயல் போன்ற காலங்களில் ஆபத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது, எரிவாயு சிலிண்டர் வெடித்துதீவிபத்து ஏற்பட்டால் ஈரத்துணி மற்றும் வாளியை கொண்டு மூடி எவ்வாறு தீவிபத்து ஏற்படாமல் தடுப்பது, எண்ணெய் பொருட்களினால் தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீரை கொண்டு அணைக்ககூடாது, நுரையை பாய்ச்சி காற்றினை வெளியேற்றி தீ விபத்தை தடுக்க வேண்டும் என்றும் செய்து காட்டப்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட பெரிய மாடி கட்டிடங்களில் இருந்து உள்ளே சிக்கியவர்களை எவ்வாறு மீட்டு கொண்டு வருவது என்றும் தீயணைப்பு வீரர்கள் மூலம் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

Next Story