மாவட்ட செய்திகள்

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது + "||" + We arrested the Tamil Party executive

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது

நாம் தமிழர் கட்சி நிர்வாகி கைது
தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
தக்கலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.
அவதூறு பேச்சு
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்களை கொள்ளை அடிப்பதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  
இதில் பங்கேற்று பேசிய அந்த கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பாக  சர்ச்சை எழுந்தது. 
நள்ளிரவில் கைது
அதைதொடர்ந்து, ஆர்ப்பாட்டம் முடிவடைந்த பின்பு சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்த சாட்டை துரை முருகனை நள்ளிரவில் நாங்குநேரி பகுதியில் வைத்து தக்கலை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை தக்கலைக்கு அழைத்து வந்து பத்மநாபபுரம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நீதிபதி தீனதயாளன் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது அவரை வருகிற 25-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 
கைது செய்யப்பட்டுள்ள சாட்டை துரைமுருகன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.