மாவட்ட செய்திகள்

அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரிசனம் + "||" + BJP Leader Annamalai Darshan at Ayya Vaikunda Dharmapathi temple

அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரிசனம்

அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தரிசனம்
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அகில இந்திய கயிறு வாரிய தலைவர் குப்புராமு, மறைந்த முன்னாள் தர்மபதி தலைவர் தங்கபெருமாளுக்கு ‘வைகுண்ட மாமணி’ என்ற பட்டம் வழங்கினார். அதை கோவில் நிர்வாகத் தலைவர் துரைப்பழம், துணைத்தலைவர் சுந்தரேசன், பொருளாளர் ஜெயக்கொடி, செயலாளர் ஐவென்ஸ் மற்றும் நிர்வாகிகள் பெற்றுக்கொண்டனர்.