மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் மேலும் 56 பேருக்கு கொரோனா + "||" + Corona for 56 more in Pondicherry

புதுச்சேரியில் மேலும் 56 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 56 பேருக்கு கொரோனா
புதுச்சேரியில் மேலும் 56 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி, அக்.13-
புதுவையில் நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 56 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 95 பேர், வீடுகளில் 522 பேர் என 617 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 78 பேர் குணமடைந்தனர். புதிதாக உயிரிழப்பு ஏதும் இல்லை. 
தொற்று பரவல் 1.23 சதவீதமாகவும், குணமடைவது 98.06 சதவீதமாகவும் உள்ளது. நேற்று முன்தினம் முதல்கட்ட தடுப்பூசியை 1,662 பேரும், 2-ம் கட்ட தடுப்பூசியை 4 ஆயிரத்து 386 பேரும் போட்டுக்கொண்டனர். இதுவரை 10 லட்சத்து 59 ஆயிரத்து 66 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.