மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில்2 ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளா் + "||" + Candidate who wins by 2 votes

ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில்2 ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளா்

ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தலில்2 ஓட்டு வித்தியாசத்தில் வென்ற வேட்பாளா்
மேல்புவனகிரி ஒன்றியம்
புவனகிாி, 
கடலூா் மாவட்டத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பா் மாதம் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடந்தது. இதில் மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தில்லைநாயகபுரம் ஊராட்சி மன்ற தலைவா் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற நாகூரான் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து காலியாக இருந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் இறந்த நாகூரானின் மனைவி மகாவதி உள்பட 4 போ் போட்டியிட்டனா்.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று மேல்புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் மொத்தம் பதிவான 828 வாக்குகளில் மகாவதி 268 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் கலையரசி 266 வாக்குகள் பெற்றார். 10 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 4 பேர் போட்டியிட்ட இந்த தேர்தலில் மகாவதி 2 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.