வாலிபரிடம் செல்போன் பறித்த திருநங்கை உள்பட 2 பேர் கைது
வாலிபரிடம் செல்போன் பறித்த திருநங்கை உள்பட 2 பேர் கைது
கோவை
கோவை வ.உ.சி. பூங்கா அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியில் நின்று கொண்டிருந்த திருநங்கை ஒருவர், மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி உள்ளார். பின்னர் அந்த திருநங்கையும், அவருடன் இருந்த வாலிபர் ஒருவரும் கத்தியை காட்டி அந்த வாலிபர் வைத்திருந்த செல்போன் மற்றும் ஆயிரம் ரூபாய் பறித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாலிபர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வாலிபரை கத்தியை காட்டி மிரட்டியது சிவானந்தா காலனியை சேர்ந்த கீர்த்தனா (வயது 28) என்ற திருநங்கையும் அவரது நண்பர் உஜ்ஜத் அலி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story