சட்ட விழிப்புணர்வு முகாம்


சட்ட விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 13 Oct 2021 5:11 PM IST (Updated: 13 Oct 2021 5:11 PM IST)
t-max-icont-min-icon

சட்ட விழிப்புணர்வு முகாம்

பெருமாநல்லூர்
 திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில்  சட்ட விழிப்புணர்வு முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் பெருமாநல்லூர் அருகே சொக்கனூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதியும், திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் குழு தலைவருமான சுவர்ணம் நடராஜன் தலைமை தாங்கி பேசினார். இதில்
நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சுகந்தி, இலவச சட்ட உதவி மைய வக்கீல் அருணாசலம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 40க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. 100க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.

Next Story