கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தாமதம்
கைதிகளுக்கு கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தாமதம்
திருப்பூர்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய தாமதம் ஏற்படுவதாகவும், இதற்காக செல்கிற போலீசார் அலைக்கழிக்கப்படுவதாகவும் போலீசார் புகார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை கைதிகள்
திருப்பூர் மாநகரில் வடக்கு, தெற்கு, மத்திய போலீஸ் நிலையம், நல்லூர், வீரபாண்டி, திருமுருகன்பூண்டி, 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம் மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள் என பல்வேறு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இந்த போலீஸ் நிலையங்களில் தினந்தோறும் குற்ற வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. இந்த வழக்கில் தொடர்புடைய விசாரணை கைதிகள் கைது செய்யப்படுதற்கு முன்பாக அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை நீதிபதிகளிடம் காண்பிக்கப்பட்டு, அவரது உத்தரவின் பேரில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு கைதிகள் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
இதனால் விசாரணை கைதிகளை அழைத்துக்கொண்டு மருத்துவ பரிசோதனை செய்ய போலீசார் பலரும் தாராபுரம் ரோட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு செல்வது வழக்கம். இவ்வாறு வருகிற விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதில் மிகவும் தாமதம் ஏற்படுவதாகவும், போலீசார் அலைக்கழிக்கப்படுவதாகும் புகார் எழுந்துள்ளது.
போலீசார் அலைக்கழிப்பு
இது குறித்து போலீசார் கூறியதாவது:-
விசாரணை கைதிகளை மருத்துவ பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றால், பல மணி நேரம் காத்திருக்க வைக்கிறார்கள். இதுபோல் போலீசாரையும் அலைக்கழித்து வருகிறார்கள். இதனால் பலர் மன உளைச்சலில் இருந்து வந்து கொண்டிருக்கிறோம். நீண்ட நேரத்திற்கு பிறகு விசாரணை கைதிகளை அழைத்து செல்வதால், உயர் அதிகாரிகளும் திட்டுகிறார்கள்.
நீண்ட நேரம் மருத்துவமனையில் காத்திருப்பதால் விசாரணை கைதிகள் தப்பி செல்வதற்கும் வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவமனை நிர்வாகம் விசாரணை கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வருகிற விசாரணை கைதிகளுக்கு உடனே பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இ்வ்வாறு அவர்கள் கூறினர்.
------
Related Tags :
Next Story