உத்தமபாளையத்தில் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு
உத்தமபாளையத்தில் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டது.
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள், தங்களுக்கு புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தனர்.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின்பேரில் திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுனன் தலைமை தாங்கி, 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டை வழங்கினார். இதில், வட்ட வழங்கல் துணை தாசில்தார் சுருளி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story