மாவட்ட செய்திகள்

பெண்ணாடத்தில் துணிகரம்ஓய்வுபெற்ற சர்வேயர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + "||" + Jewelry robbery

பெண்ணாடத்தில் துணிகரம்ஓய்வுபெற்ற சர்வேயர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பெண்ணாடத்தில் துணிகரம்ஓய்வுபெற்ற சர்வேயர் வீட்டில் ரூ.5 லட்சம் நகை கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பெண்ணாடத்தில் ஓய்வுபெற்ற சர்வேயர் வீட்டில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெண்ணாடம், 

ஓய்வுபெற்ற சர்வேயர்

பெண்ணாடம் வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(வயது 63), ஓய்வு பெற்ற சர்வேயர். இவருக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 11-ந்தேதி ஆறுமுகம் மகன் வினோத்குமார் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவி ரம்யாவை தாய் வீடான அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் கொண்டு விட்டு விட்டு, தந்தையை பார்க்க சென்னை சென்றார்.

கதவை உடைத்து...

இந்த நிலையில் நேற்று அதிகாலை ஆறுமுகத்தின் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி ரம்யாவுக்கும் மற்றும் பெண்ணாடம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் மற்றும் ரம்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 14 பவுன் நகைகள், 120 கிராம் வெள்ளி பொருட்களை காணவில்லை. வினோத்குமார், ரம்யா தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் ரேகைகளை சேகரித்துச் சென்றனர்.

ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும்

மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவத்தால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபடவேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை
மதுரை அருகே டாக்டர் வீட்டில் 50 பவுன் நகையை கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
2. விழுப்புரம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் நகை கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் ரூ.3½ லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
3. பண்ருட்டி அருகே பரபரப்பு பேராசிரியர் வீட்டு கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை கொள்ளை மர்ம மனிதர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
பண்ருட்டி அருகே பேராசிரியர் வீட்டு கதவை உடைத்து ரூ.4 லட்சம் நகை, பணத்தை கொள்யைடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை கொள்ளை
சங்கரன்கோவில் அருகே கட்டிட காண்டிராக்டர் வீட்டில் புகுந்து ரூ.7 லட்சம் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
5. கோவில் பூட்டை உடைத்து நகை கொள்ளை
திங்கள்சந்தை அருகே கோவில் பூட்டை உடைத்து நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.