15 ஆடுகள் சாவு


15 ஆடுகள் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2021 10:43 PM IST (Updated: 13 Oct 2021 10:43 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே குருணை மருந்து கலந்த அரிசியை தின்ற 15 ஆடுகள் உயிரிழந்தன

குத்தாலம்;
மயிலாடுதுறை அருகே குருணை மருந்து கலந்த அரிசியை தின்ற 15 ஆடுகள் உயிரிழந்தன. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 
15 ஆடுகள் சாவு
மயிலாடுதுறை அருகே பெரம்பூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட அரிவேளூர் கிராமம் மாரியம்மன்கோவில் பின்புறம் உள்ள திடலில் மேய்ந்துகொண்டிருந்த 5 ஆடுகள் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தன. இந்தநிலையில் நேற்றும் திடலில் மேய்ந்து கொண்டிருந்த மீனா என்பவருக்கு சொந்தமான 4 ஆடுகள், பன்னீர்செல்வம் என்பவரின் 3 ஆடுகள், மீராவின் 2 ஆடுகள் உள்பட 15 ஆடுகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஆட்டின் உரிமையாளர்கள் திடலுக்கு சென்று பார்த்தனர். அப்போது மர்மநபர்கள் அரிசியில் குருணை மருந்தை கலந்து பாத்திரத்தில் வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணை
இது குறித்து பெரம்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அரிசியில் குருணை மருந்தை கலந்து வைத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குருணை மருந்து கலந்த அரிசியை தின்ற 15 ஆடுகள்  

Next Story