விபத்தில் பெண் சாவு


விபத்தில் பெண் சாவு
x
தினத்தந்தி 13 Oct 2021 11:16 PM IST (Updated: 13 Oct 2021 11:16 PM IST)
t-max-icont-min-icon

விபத்தில் பெண் சாவு

சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே எஸ்.வையாபுரிபட்டியைச் சேர்ந்தவர் தயாநிதி (வயது 52). இவர் தனது மகன் விக்னேஸ்வரனுடன் இருசக்கர வாகனத்தின்  பின்னால் அமர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு சென்றுள்ளார். செல்லியம்பட்டி அருகே சென்றபோது நிலைதடுமாறி தயாநிதி தவறி கீழே விழுந்தார்.இதில் தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்து குறித்து  எஸ்.வி. மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story