மனைவியை தாக்கியவர் கைது
தளவாய்புரம் அருகே மனைவியை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
தளவாய்புரம்,
தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் மகள் சகுந்தலா தேவி (வயது 30). இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜ் (35) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு முதல் சகுந்தலா தேவி அப்பா ரவிக்குமார் வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் பேரின்ப ராஜ், குடிபோதையில் சகுந்தலா தேவியிடம் தன்னுடன் வந்து வாழுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத சகுந்தலா தேவியை கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளார். இதனால் மனைவிக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. இதனை தடுக்க வந்த ரவிக்குமார் கையிலும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேரின்ப ராஜை கைது செய்தனர்.
Related Tags :
Next Story