உடல் கருகிய நிலையில் வாலிபர் பிணம்


உடல் கருகிய நிலையில் வாலிபர் பிணம்
x
தினத்தந்தி 18 Oct 2021 11:42 PM IST (Updated: 18 Oct 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

உடல் கருகிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார்.

அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை வனச்சரகம் கோட்டை முனீஸ்வரர் கோவில் அருகே உள்ள மூங்கில் தாரை பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபரின் உடல் தீயில் கருகிய நிலையில் கிடந்தது. மேலும் அவரது உடலில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அரிமளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவர் கொலை செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story