மாவட்ட செய்திகள்

திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை + "||" + Rehearsal

திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை

திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
திருச்சி அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை
திருச்சி, அக்.19-
திருச்சி அரசு மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பாக தீ தடுப்பு ஒத்திகை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. பயிற்சி டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் கலந்து கொண்டனர். எதிர்பாராதவிதமாக  தீ விபத்து ஏற்பட்டால் எப்படி செயல்படுவது, அவசர காலத்தில் நோயாளிகளைப் பத்திரமாக மீட்பது குறித்தும் தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர். மேலும் சமையல் கியாஸ் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தால் எப்படி அதை கையாளுவது என்பது குறித்தும் விளக்கப்பட்டது. இதில் மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி அனுசுயா, உதவி மாவட்ட அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் மெல்கியூராஜா கலந்து கொண்டு பல்வேறு பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் வழங்கினர். நிகழ்ச்சியில் மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் டாக்டர் அருண் ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
பேரிடர் கால விழிப்புணர்வு ஒத்திகை
2. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீத்தடுப்பு ஒத்திகை
4. மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
மீனாட்சி அம்மன் கோவிலில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை
5. ஹெலிகாப்டர் மூலம் தேசிய பாதுகாப்பு படையினர் ஒத்திகை
மதுரையில் தேசிய பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டர் மூலமாக தீவிரவாத தடுப்பு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.