‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு வந்த மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சாலை சீரமைக்கப்படுமா?
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் பரப்பனாமேடு ஊராட்சியில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது. மழை காலத்தில் மழை தண்ணீர் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். பள்ளி செல்லும் மாணவ -மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரப்பனாமேடு சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.
-பொது மக்கள், பரப்பனாமேடு ஊராட்சி.
-பொது மக்கள், பரப்பனாமேடு ஊராட்சி.
ஒளிராத மின் விளக்கு
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகரம் அபிசேகக்கட்டளை தெருவில் உள்ள மின்கம்பம் ஒன்று சேதம் அடைந்து விட்டது. மேலும் இரண்டு மாதமாக மின்விளக்கு ஒளிரவில்லை. தெருவில் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. மேலும் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதியும் கிடையாது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சுரேஷ், திருத்துறைப்பூண்டி.
-சுரேஷ், திருத்துறைப்பூண்டி.
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு அருகே அமைந்துள்ளது பருத்திக்குடி கிராமம். இங்குள்ள மக்கள் பயன்படும் வகையில் பருத்திக்குடியில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ளது. ஆனால் எந்த பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நின்று செல்வது கிடையாது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்திற்காக 1 கி.மீ. தூரம் நடந்து நெடுங்காட்டிற்கு சென்று வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பருத்திக்குடி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
-பொதுமக்கள், பருத்திக்குடி.
-பொதுமக்கள், பருத்திக்குடி.
Related Tags :
Next Story