விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது


விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது
x
தினத்தந்தி 21 Oct 2021 12:05 AM IST (Updated: 21 Oct 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

விதிமீறி ஆலையில் பட்டாசு தயாரிப்பு; போர்மேன் கைது

சிவகாசி
திருத்தங்கலை சேர்ந்த ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செங்கமலப்பட்டியில் உள்ளது. இந்ந பட்டாசு ஆலையில் விதிகளை மீறி பட்டாசு தயாரிக்கப்பட்டது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த ஆலைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இந்த விதி மீறல் சம்பவம் குறித்து கீழத்திருத்தங்கல் கிராம நிர்வாக அலுவலர் செல்லச்சாமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆலையின் உரிமையாளர் ராமலட்சுமி, போர்மென் கிருஷ்ணசாமி (வயது 61) ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து போர்மென் கிருஷ்ணசாமியை கைது செய்தனர்.

Next Story