தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Oct 2021 11:32 AM IST (Updated: 21 Oct 2021 11:32 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி:
தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் கலாவதி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் தெய்வானை, ஆறுமுகம், சண்முகம், ரோஜா மணி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். கட்டுமான தொழிலாளர்களின் மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கவேண்டும். தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கவேண்டும். கட்டுமான பொருட்களின் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்டுமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story