பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த திருவாரூர் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு

பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த திருவாரூர் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 21 Oct 2021 7:07 PM IST (Updated: 21 Oct 2021 7:07 PM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த திருவாரூர் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருவாரூர்:-

பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த திருவாரூர் போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

போலீஸ்காரருடன் காதல்

திருவாரூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வேலை பார்த்தபோது எனக்கும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் சதீஷ் (வயது24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
என்னை அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசம் அனுபவித்தார். இந்த நிலையில் நான் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்து கொலை மிரட்டல் விடுத்தார். எனவே போலீஸ்காரர் சதீஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

வழக்குப்பதிவு

புகாரின்பேரில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீசார் பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரர் சதீஷ் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
===

Next Story