ஆலங்குடி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை
ஆலங்குடி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி:
பெண் தற்கொலை
ஆலங்குடி அருகே வடக்கு அரையப்பட்டியை சேர்ந்தவர் அடைக்கலம் மகள் பிரேமா (வயது 38). இவருக்கும், கொத்தமங்கலத்தை சேர்ந்த மணவாளன் கரை இரவி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் பிரேமா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார். கடந்த 19-ந் தேதி பிரேமா வடக்கு அரையப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால் அவர் அங்கும் செல்லவில்லை. இதனால் அடைக்கலம் தனது மகள் பிரேமாவை காணவில்லை என்று ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருந்தார். போலீசார் பிரேமாவை தேடி வந்தனர். இந்நிலையில் அரையப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரகாந்த் மற்றும் போலீசார் அங்கு சென்று கிணற்றிலிருந்து பெண்ணின் பிணத்தை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் விசாரணை நடத்தியதில் கிணற்றில் கிடந்த பெண் உடல் பிரேமா என்று தெரியவந்தது. இதையடுத்து பிரேமா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story