காணாமல் போன 100 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடிப்பு


காணாமல் போன 100 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 22 Oct 2021 4:06 PM GMT (Updated: 22 Oct 2021 4:06 PM GMT)

காணாமல் போன 100 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடித்து உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்

திருவண்ணாமலை

காணாமல் போன 100 செல்போன்கள் சைபர் கிரைம் போலீசார் மூலம் கண்டுபிடித்து  உரியவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டு ஒப்படைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் செல்போன்களை வழிப்பறி, திருட்டு மற்றும் கவனக்குறைவால் பல்வேறு இடங்களில் பறிகொடுத்துள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்துள்ளனர். 

இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் உத்தரவின் பேரில் மாவட்ட குற்ற ஆவண காப்பக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை மேற்பார்வையில் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் சைபர் கிரைம் போலீசார் செல்போன் காணாமல் போனதாக வந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். 

அதில் மாவட்ட முழுவதும் காணாமல் போன சுமார் 100 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். 

முதல் கட்டமாக சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 செல்போன்களை இன்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் அலுவலக கூட்டரங்கில் வைத்து உரியவர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமை தாங்கி சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை வழங்கினார்.

Next Story