மாவட்ட செய்திகள்

மயங்கி விழுந்து மூதாட்டி பலி + "||" + death

மயங்கி விழுந்து மூதாட்டி பலி

மயங்கி விழுந்து மூதாட்டி பலி
விசாரணையின்போது மயங்கி விழுந்து மூதாட்டி பலியானார்.
ராமேசுவரம், 
ராமேசுவரம் ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்தவர் அந்தி யாஸ் என்பவரது மனைவி தல்வி (வயது62). இவரது மகன் ரூபன் என்பவருக்கும் உறவினர்கள் புதுமைப்பித்தன், அவரது மகன் டேவிட், தம்பி ஆல்ட்ரின் ஆகியோருக்கு சொத்து பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டது. இதில் காயமடைந்த ரூபன் ராமேசுவரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தனது தாயாரோடு போலீஸ் நிலையத்திற்கு வந்தார். போலீஸ் நிலையத்தில் இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து கொண்டிருந்தபோது திடீரென மூதாட்டி தல்வி மயங்கி விழுந்தாராம். மயங்கி விழுந்த அவரை உடனடியாக போலீசாரும், உறவினர்களும் மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கு மூதாட்டி பலி
கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்
2. கார் மோதி மூதாட்டி பலி
கார் மோதி மூதாட்டி பலியானார்.
3. மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
மாடியில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.
4. சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி
சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலியானார்.