கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர் சாவு
கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர் திடீரென உயிரிழந்தார்.
சிவகங்கை,
பள்ளிக்கல்வி துறையில் 2021-2022-ம் கல்வியாண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் உள்ள மாநில, மாவட்ட திட்ட அலுவலகங்கள், வட்டார மற்றும் குறு வளமையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு சிவகங்கை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் மானாமதுரை ஒன்றியத்தில் கணித ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றிய சின்னதங்கம் என்பவரும் கலந்து கொண்டார். அவர் ஏற்கனவே பணிபுரிந்த அதே இடத்தையே மீண்டும் தேர்வு செய்தார். அவருக்கு அதற்கான உத்தரவும் வழங்கபட்டது. பின்னர் தன்னுடைய நண்பர் வருகைக்காக கலந்தாய்வு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் அவர் தங்கியிருந்தார். இந்தநிலையில் அவரருக்கு நள்ளிரவில் மாராடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை சிவகங்கை மருத்துவ கல்லுாரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
Related Tags :
Next Story