சின்னசேலத்தில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை


சின்னசேலத்தில்  விவசாயி கத்தியால் குத்திக்கொலை
x
தினத்தந்தி 22 Oct 2021 11:25 PM IST (Updated: 22 Oct 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் விவசாயி கத்தியால் குத்திக்கொலை


சின்னசேலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் மாரியம்மன் கோவில் அருகே பண்ணையத்து சந்து தெருவைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது 75) விவசாயி. இவரது மனைவி லட்சுமி, மகன்கள் செல்லதுரை, பாபு ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இதனால் தனக்கு சொந்தமான ஓட்டு வீ்ட்டில் தனியாக வசித்து வந்த முருகேசனை நேற்று முன்தினம் இரவு யாரோ மர்ம நபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். 

இதுபற்றிய தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சத்தியசீலன், மாணிக்கம் உள்ளிட்ட போலீசார் முருகேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இருதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து முருகேசனை கொலை செய்த மர்மநபர்கள் யார்? அவரை எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த வீட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் நேரில் பார்வையிட்டார்.

Related Tags :
Next Story