மாவட்ட செய்திகள்

கைக்குழந்தையுடன் போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண் + "||" + woman struggling

கைக்குழந்தையுடன் போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்

கைக்குழந்தையுடன் போராடி காதலனை கரம் பிடித்த இளம்பெண்
விருத்தாசலம் அருகே உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த காதலனை இளம்பெண் போராடி கரம் பிடித்தார்.
கம்மாபுரம், 

விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் சந்தியா(வயது 26). இவரும், அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் வேல்முருகன் (36) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இதில் சந்தியா கர்ப்பமானார். 
இதையடுத்து அவர், வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தினார். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி தட்டிக்கழித்து வந்ததாக தெரிகிறது. 

திருமணம் 

இதனிடையே சந்தியாவிற்கு கடந்த 10-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அவர், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வேல்முருகனிடம் கூறியுள்ளார். ஆனால் வேல்முருகனின் தாயார், தங்கை, தங்கையின் கணவர் ஆகியோர் சந்தியாவிடம் வரதட்சனை கேட்டுள்ளனர். 
இது குறித்து சந்தியா ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வேல்முருகனை அழைத்து அறிவுரை வழங்கினர். இதையடுத்து வேல்முருகன் சந்தியாவை  திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார்.  அதனை தொடர்ந்து கொளஞ்சியப்பர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இதில் குழந்தையின் முன்பு அவர்கள் திருமணம் செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. காதலன் ஏற்காததால் அரசு ஆஸ்பத்திரியில் இளம்பெண் தற்கொலை
கணவர், 2 மகள்களை உதறிவிட்டு ராமநாதபுரம் வந்த இளம்பெண்ணை, காதலன் திருமணம் செய்ய மறுத்ததால், அந்த பெண் அரசு ஆஸ்பத்திரியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட விபரீத சம்பவம் நடந்துள்ளது.
2. சென்னையில் பயங்கரம்: அம்மிக்கல்லை தலையில் போட்டு இளம்பெண் படுகொலை
நடத்தையில் சந்தேகப்பட்டு அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை படுகொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார்.
3. பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்பு
பூந்தமல்லி அருகே பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் பிணமாக மீட்கப்பட்டார்.
4. ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டுப்பாடி போலீசார் முன்பு நடனமாடி இளம்பெண் ரகளை
முககவசம் அணியாததற்கு அபராதம் விதித்ததால், ‘விரட்டி விரட்டி வெளுக்க தோணுது’ என பாட்டு பாடி, ரெயில்வே போலீசார் முன்பு நடனமாடி ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணால் சேத்துப்பட்டு ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
5. வடலூர் அருகே பரபரப்பு இளம்பெண், தூக்குப்போட்டு தற்கொலை கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் போராட்டம்
வடலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கு காரணமான கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்யக்கோரி இளம் பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.