மணல் கடத்திய வாலிபர் கைது


மணல் கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2021 1:53 AM IST (Updated: 23 Oct 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் (பொறுப்பு) தினேஷ் அவருடைய உதவியாளருடன் தாதம்பேட்டை பொன்னாற்றங்கரையில் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது தாதம்பேட்டை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பியின் மகன் லோகநாதன்(வயது 35), அனுமதியின்றி தனது மொபட்டில் 4 மணல் மூட்டைகளை ஏற்றி வந்தது தெரியவந்தது. இது குறித்து தா.பழூர் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, லோகநாதனை கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தார்.

Next Story