கெட்டுப்போன 100 கிலோ மீன், இறைச்சி பறிமுதல்
பெரியகுளம் நகராட்சி பகுதியில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கெட்டுப்போன மீன்கள், இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று காலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ராகவன் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜ் தலைமையில் அலுவலர்கள் பெரியகுளம் தென்கரையில் உள்ள மீன்மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் அதிரடி சோதனை செய்தனர்.
அப்போது மீன் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்கள், ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்த கெட்டுப்போன இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த சோதனையில் 100 கிலோ மீன், இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் இருந்த மளிகை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story