மணல் ஏற்றப்பட்ட டிராக்டர் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
மணல் ஏற்றப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே வெண்மான்கொண்டான் கிராம நிர்வாக அலுவலர் கனகராஜிக்கு அப்பகுதியில் உள்ள பெரிய ஓடையில் மணல் திருட்டு நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் பெரிய ஓடைக்கு சென்று பார்த்தபோது டிராக்டரில் 2 பேர் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். கிராம நிர்வாக அலுவலரை கண்டதும் 2 ேபரும் தப்பிச்சென்றனர். இது குறித்து உடையார்பாளையம் போலீசில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் தேடிவருகின்றனர்.
Related Tags :
Next Story