எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கம்
திருச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் வருகிற 1-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
திருச்சி, அக். 26-
திருச்சியில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் வருகிற 1-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
சிறப்பு ரெயில்
கொரோனா ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து எக்ஸ்பிரஸ் ரெயில்கள் அனைத்தும் சிறப்பு ரெயில்களாக இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். இதற்கிடையே வருகிற 1-ந்தேதி முதல் திருச்சி கோட்டத்திற்கு உட்பட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் முன்பதிவில்லாமல் பொதுப்பெட்டிகளில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ெரயில் (வ.எண் 02627/02628) மற்றும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரை செல்லும் சிறப்பு ெரயில் (வ.எண் 06850/06849) ஆகிய ரெயில்கள் இரு மார்க்கங்களிலும் 4 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டுகளில் பயணம் செய்யலாம். திருச்சி திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் அதிவிரைவு ரெயில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும் அந்த ரெயிலில் டி-13 முதல் டி-16 வரையிலான பெட்டிகளும் திருச்சியில் இருந்து ராமேசுவரம் வரை செல்லும் ரெயிலில் டி-5 முதல் டி-8 வரையிலான பெட்டிகளும் முன்பதிவு இல்லாதவை ஆகும்.
பாலக்காடு ரெயில்
மேலும் திருச்சியில் இருந்து கரூர், கோவை வழியாக பாலக்காடு வரை செல்லும் சிறப்பு ெரயில் (வ.எண் 06843/06844) இந்த ெரயிலில் இரு மார்க்கங்களிலும் 6 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதியை பெட்டிகளில் சாதாரண டிக்கெட்டில் பயணம் செய்யலாம். ஒவ்வொரு பெட்டியிலும் சராசரியாக 90 இருக்கைகள் உள்ளன.

Related Tags :
Next Story