இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2021 11:32 AM GMT (Updated: 2021-10-27T17:02:47+05:30)

இந்து முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆண்டிப்பட்டி:

இந்து முன்னணி சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ஆண்டிப்பட்டியில் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் செல்வம் தலைமை தாங்கினார். இதில் இந்து முன்னணியினர் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு சொந்தமான தங்க நகைகளை உருக்கி, தங்க கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

 தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், நகைகளில் பதிக்கப்பட்டுள்ள வைரகற்களை அரசு என்ன செய்யப் போகிறது? என்றும் ஆர்ப்பாட்டத்தின்போது கேள்வி எழுப்பினர். 

மேலும் கோவில் சொத்துக்கள் கொள்ளை போக வழிவகை செய்யும் அரசின் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்றும் இந்து முன்னணியினர் வலியுறுத்தினர்.
-----

Next Story