கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டம் 9 பேர் கைது


கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டம்  9 பேர் கைது
x
தினத்தந்தி 27 Oct 2021 11:11 PM IST (Updated: 27 Oct 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் ஆன்லைன் சூதாட்டம் 9 பேர் கைது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் கள்ளக்குறிச்சி கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டில் புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து ஆன்லைன் மூலம் சூதாட்டம் ஆடி பலலட்சத்தை சுருட்டியது தெரியவந்தது.

இது தொடர்பாக க.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 27), சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா சாமி நாயக்கனபட்டி சந்திரசேகர்(27), மண்மலை கிராமம் கிருஷ்ணமூர்த்தி (27), சின்னசேலம் காந்தி நகர் கோகுல்நாத் (24), சங்கராபுரம் பாவளம் கிராமம் மணிவேல்(27), சின்னசேலம் தாலுகா ஈசாந்நை கிராமம் அரவிந்த்(24), சின்னசேலம் காந்தி நகர் பிரகாஷ் என்கிற அருண்குமார்(24), மணிகண்டன் (24), கரடிசித்தூர் கிராமம் பாலாஜி (23) ஆகிய 9 பேரை கைது செய்த போலீசார்  சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 6 கணினி, ஒரு ஸ்கேனர், 30 செல்போன்கள், 400 சிம்கார்டுகள், எல்.இ.டி. டிவி, ஒரு கார், ஒரு பைக் மற்றும் ரூ.20 லட்சம் ஆகியவற்றை பறிமுதல்செய்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story