விவசாயிகளுக்கு ஆலோசனை


விவசாயிகளுக்கு ஆலோசனை
x
தினத்தந்தி 31 Oct 2021 12:41 AM IST (Updated: 31 Oct 2021 12:41 AM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டையில் விவசாயிகளுக்கு வயல் தின விழாவையொட்டி ஆலோசனை வழங்கப்பட்டது.

தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை வட்டார விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் வயல் தின விழாவினை முன்னிட்டு சல்வார்பட்டியில் வெம்பக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜோதிபாசு தலைமையில் விவசாயிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தி.மு.க. வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார். வட்டார தொழில்நுட்ப மேலாளர் முத்துச்செல்வி வரவேற்றார். பயறு வகை பயிர்களுக்கு 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசல் பயன்படுத்த வேண்டும். தோட்டக்கலை துறையில் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மரக்கன்று, மற்றும் காய்கறி சாகுபடி செய்வது பற்றியும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் மாரிராஜ் நன்றி கூறினார்.

Next Story