பெரியகுளம் வடக்குமடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
பெரியகுளம் வடக்குமடை ஆக்கிரமிப்புகள் அகற்றம் செய்யப்பட்டது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடி பெரிய கண்மாய் வடக்கு மடையை தனிப்பட்ட சில நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் மற்றும் பல குடும்பங்களின் வாழ்வாதார விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை முறைப்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்களின் சார்பில் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில் நேற்று அன்னவாசல் அருகே உள்ள கிளிக்குடிக்கு சென்ற இலுப்பூர் தாசில்தார் முத்தக்கருப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனே மடையை திறந்து பாசன வசதியை ஏற்படுத்தி கொடுத்தனர். துரித நடவடிக்கை எடுத்த வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறைக்கும் கிளிக்குடி பொதுமக்கள் சார்பாக நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story