செங்கப்பட்டியில் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அன்னவாசல்:
அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டியில் தீபாவளியையொட்டி ஆண்டு தோறும் கபடி போட்டி நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் கபடி போட்டி கடந்த 2 நாட்கள் இரவு பகலாக நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருமயம், இலுப்பூர், கீரனூர், விராலிமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 30-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிபடுத்தின. போட்டிகள் பல்வேறு சுற்றுகளாக நடந்தது. இதில் முதல்பரிசை நடராஜபுரம் அணியும், 2-வது பரிசை விண்ணனூர்பட்டி அணியும், 3-வது பரிசை ஆலங்குடி அணியும், 4-வது பரிசை புங்கிப்பட்டி அணியும் பெற்றன. பின்னர் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு, கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. கபடி போட்டியை அன்னவாசல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை செங்கப்பட்டி இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை அன்னவாசல் போலீசார் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story