வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 7 Nov 2021 7:43 AM IST (Updated: 7 Nov 2021 7:43 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தை அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த தீர்த்தங்கரையம் பட்டு விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் முஜிபூர் ரகுமான். இவர் நகை பாலிஷ் செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு திருவண்ணாமலைக்கு சென்றார். 

நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் 50 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story