கறம்பக்குடியில் 300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது
300 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி பகுதியில் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. இதன்பேரில் கறம்பக்குடி பகுதியில் சோதனை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் தனி பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கறம்பக்குடி நகர பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கறம்பக்குடி கச்சேரிவீதியில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்த போது அங்கு மூட்டை மூட்டையாக 300 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்த அந்த குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக ஆசாத் (வயது 32), முகமது இக்பால் (வயது 37) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து குட்கா பாக்கெட்டுகள் எந்த கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story