புதிய ரேஷன் கடை கட்டும் பணி


புதிய ரேஷன் கடை கட்டும் பணி
x
தினத்தந்தி 9 Nov 2021 9:56 PM GMT (Updated: 9 Nov 2021 9:56 PM GMT)

சிவகாசி அருகே ரேஷன் கடை கட்டும் பணியை சப்-கலெக்டர் ஆய்வு செய்தார்.

சிவகாசி, 
சிவகாசி யூனியனுக்கு உட்பட்டது ஆலமரத்துப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ரேஷன் கடை தற்காலிகமாக நூலகத்தில் இயங்கி வருகிறது. ரேஷன் கடை கட்ட தேர்வு செய்யப்பட்ட இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து இருந்தார். இதுகுறித்து  தினத்தந்தியில் செய்தி வெளியானது. இதையடுத்து சிவகாசி தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் மலையரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ் மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் அந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று  சிவகாசி சப்-கலெக்டர் பிரிதிவிராஜ், தாசில்தார் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் ரேஷன் கடை கட்டும் பணியினை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு வந்த பஞ்சாயத்து தலைவர் ஜோதிலட்சுமி கவி புதிய ரேஷன் கடை அமைக்க உதவிய மாவட்ட நிர்வாகத்துக்கும், சிவகாசி சப்-கலெக்டர், தாசில்தார் மற்றும் அதிகாரிகளுக்கு பஞ்சாயத்து மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தார்.

Next Story