மாவட்ட செய்திகள்

கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் + "||" + Seizure of ration rice

கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கர்நாடகாவுக்கு வேனில் கடத்த முயன்ற 2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட பறக்கும் படை தனி தாசில்தார் பரிமேலழகன், தனி வருவாய் அலுவலர் சதீஷ் மற்றும் அதிகாரிகள் கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே உத்தனப்பள்ளி பிரிவு சாலையில் நேற்று மாலை, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் 50 மூட்டைகளில் சுமார் 2½ டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கர்நாடகா மாநிலம் கோலம்பள்ளி சாப்பூரை சேர்ந்த ராஜா (வயது22) என்பதும், ராயக்கோட்டை பகுதிகளில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் சரக்கு வேனை பறிமுதல் செய்த அலுவலர்கள், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் வாலிபர் கைது
திண்டிவனத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
2. பொதட்டூர்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொதட்டூர்பேட்டை அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
3. காரில் கடத்திய 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மார்த்தாண்டத்தில் காரில் கடத்திய 1,200 கிேலா ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4. ஆட்டோவில் கடத்திய 495 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது
காரைக்குடி அருகே நடந்த வாகன சோதனையில் ஆட்டோவில் கடத்திய 495 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.
5. 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
வாணியக்குடியில் தென்னந்தோப்பில் பதுக்கி வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.