பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய அடைவு திறனாய்வு தேர்வு


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய அடைவு திறனாய்வு தேர்வு
x
தினத்தந்தி 12 Nov 2021 7:52 PM GMT (Updated: 12 Nov 2021 7:52 PM GMT)

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேசிய அடைவு திறனாய்வு தேர்வு நடந்தது.

பெரம்பலூர்:
பள்ளி மாணவ-மாணவிகளின் கற்றல் அடைவு திறனை கண்டறிய மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் 3, 5, 8, 10 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேசிய அடைவு திறனாய்வு தேர்வு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 3, 5, 8, 10-ம் வகுப்புகளுக்கு 158 பள்ளிகளில் தேசிய அடைவு திறனாய்வு தேர்வு நேற்று நடந்தது. இதில் 3-ம் வகுப்பு மாணவ-மாணவிகளில் 835 பேரும், 5-ம் வகுப்பில் 857 பேரும், 8-ம் வகுப்பில் 1,749 பேரும், 10-ம் வகுப்பில் 1,885 பேரும் என மொத்தம் 5,326 பேர் ஓ.எம்.ஆர். ஷீட்டில் தேர்வினை எழுதினர். 3, 5-ம் வகுப்புகளுக்கு காலை 10.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12 மணிக்கு முடிவடைந்தது.
8, 10-ம் வகுப்புகளுக்கு காலை 10.30 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிவடைந்தது. தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவழகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் சண்முகம் (பெரம்பலூர்), ஜெகன்நாதன் (வேப்பூர்) மற்றும் உதவி திட்ட அலுவலர் ராஜா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story