பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு 250 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல் வாலிபர் கைது

பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு  250 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 14 Nov 2021 1:35 AM IST (Updated: 14 Nov 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூருக்கு 250 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் கடத்தல் வாலிபர் கைது

ரிஷிவந்தியம்

திருக்கோவிலூர்-திருவண்ணாமலை சாலையில் உள்ள அத்திப்பாக்கம் சோதனைச் சாவடியில் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது பஸ்சில் பயணி ஒருவர் வைத்திருந்த 3 சாக்கு மூட்டை மற்றும் 3 அட்டை பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். 

அப்போது அதில் ஏராளமான புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் அவற்றை கடத்தி வந்தவர் பெங்களூருவை சேர்ந்த சக்கரவர்த்தி மகன் சுனில்(வயது 30) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 250 கிலோ எடையுள்ள புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர். 

Next Story