கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு


கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Nov 2021 7:04 PM GMT (Updated: 2021-11-22T00:34:51+05:30)

சேத்தூர் அருகே கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது.

தளவாய்புரம், 
விருதுநகர் மாவட்டம் சேத்தூர் அருகே உள்ள தேவதானம் சாஸ்தா கோவில் அணையை திறப்பதற்காக நேற்று கலெக்டர் மேகநாத ரெட்டி, தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி காரில் புறப்பட்ட போது தேவதானம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 47) என்பவர் தனது குடும்பத்துடன் மண் எண்ணெய் கேனுடன் வந்து தனது உடலில் மண் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.  இதனையடுத்து கலெக்டர் அவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது மீண்டும் எனக்கு பொதுப்பணித் துறை காவலாளி பணி வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கை குறித்து கூறினார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறி அவரை சமாதானம் செய்தார். பின்னர் கலெக்டர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேத்தூர் அருகே கலெக்டர் முன்பு தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story