விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி


விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 23 Nov 2021 1:03 AM IST (Updated: 23 Nov 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.

விருதுநகர், 
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார். 
பருத்தி சாகுபடி 
சாத்தூர் அருகே உள்ள ராவுத்தன்பட்டியை சேர்ந்தவர் பொன் மாரியப்பன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 35).  இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் பருத்தி, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். 
இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர் இவர்களது நிலத்தில் களைக்கொல்லி அடித்து பயிர்களை நாசம் செய்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி ராஜலட்சுமி சாத்தூர் போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 
தீக்குளிக்க முயற்சி 
வருவாய் துறையிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. இந்நிலையில் ராஜலட்சுமி  நேற்று தனது மூன்று பெண் குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகம் வந்தார். அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து கலெக்டர்அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர் போலீசாரிடம் நாங்கள் தி.மு.க.வை சேர்ந்தவர்களாக இருந்தும் எங்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர் என தெரிவித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரை சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story