மாவட்ட செய்திகள்

வாகனம் மோதி வாலிபர் பலி + "||" + death

வாகனம் மோதி வாலிபர் பலி

வாகனம் மோதி வாலிபர் பலி
சிவகாசியில் வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள முனீஸ்வரன் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி மகன் சங்கரகுமார் (வயது 21). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை நாரணாபுரத்திலிருந்து சிவகாசி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பட்டாசு ஆலைக்கு சொந்தமான பஸ் ஒன்று சிவகாசியிலிருந்து நாரணாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத நிலையில் சங்கரகுமார் மீது பட்டாசு ஆலைக்கு சொந்தமான வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் வாலிபர் சங்கரகுமாருக்கு தலை, தொடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. வைகை ஆற்றில் ஆண் பிணம்
வைகை ஆற்றில் ஆண் பிணம்
2. 10-ம் வகுப்பு மாணவர் பள்ளியில் மயங்கி விழுந்து சாவு
மதுரையில் தனியார் பள்ளியில் படித்த 10-ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. சாவிலும் இணை பிரியாத தம்பதி கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
சாவிலும் இணை பிரியாத தம்பதி கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு
4. மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டெருமை கன்றுக்குட்டி
மர்மமான முறையில் காட்டெருமை கன்றுக்குட்டி இறந்து கிடந்தது.
5. வனப்பகுதிக்கு ரோந்து சென்ற ஊழியர் திடீர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதிக்கு ரோந்து சென்ற ஊழியர் திடீரென இறந்தார்.