போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டம்
அருப்புக்கோட்டையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வித்தியாச தொகை
போக்குவரத்து கழகங்களின் பற்றாக்குறையை ஈடுகட்ட வரவிற்கும், செலவிற்குமான வித்தியாச தொகையை அரசு பட்ஜெட்டில் நிதி வழங்க வேண்டும். ஊதிய பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு போக்குவரத்து தொழிற்சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி அருப்புக்கோட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
போராட்டம்
போராட்டத்திற்கு கிளை செயலாளர் திருப்பதி தலைமை தாங்கினார். தமிழக அரசு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கி தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அரசுபோக்குவரத்துக்கழக பணியாளர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story