மாவட்ட செய்திகள்

வேன் கவிழ்ந்து 6 பேர் காயம் + "||" + 6 injured as van overturns

வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்

வேன் கவிழ்ந்து 6 பேர் காயம்
கடையம் அருகே வேன் கவிழ்ந்து 6 பேர் காயம் அடைந்தனர்.
கடையம்:
தென்காசி அருகே உள்ள வடகரையில் இருந்து அம்பைக்கு ேதங்காய் பறிக்கும் தொழிலாளர்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் வந்து கொண்டு இருந்தனர். அவர்கள் வந்த வேன் கடையம் அருகே உள்ள ஆம்பூர் மஞ்சள் புளிகாலனி விலக்கு பகுதியில் உள்ள சிறிய பாலம் அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடுவதற்காக வேன் டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதில் வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் இருந்த 6 பேர் லேசான காயம் அடைந்தனர். மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.