மாவட்ட செய்திகள்

தொப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் படுகாயம் + "||" + 3 injured in truck collision

தொப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் படுகாயம்

தொப்பூர் அருகேமோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் படுகாயம்
தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
நல்லம்பள்ளி:
 தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது20). இவருடைய உறவினர்கள் மாதையன் (42), மணிகண்டன் (27). இவர்கள் 3 பேரும் தர்மபுரி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். தொப்பூர் அருகே பாளையம்புதூர் பகுதியில் சென்றபோது சேலத்தில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த ஒரு லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.