தூத்துக்குடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒற்றைக்காலில் நின்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்

தூத்துக்குடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒற்றைக்காலில் நின்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்
x
தினத்தந்தி 24 Nov 2021 4:17 PM IST (Updated: 24 Nov 2021 4:17 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒற்றைக்காலில் நின்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஒற்றைக்காலில் நின்று நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.
மக்கள் அவதி
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தாளமுத்துநகர் பகுதியில் சுமார் 1½ லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்கள் வந்து செல்லும் தாளமுத்து நகர் பிரதான சாலை பழுதடைந்து ஓர் ஆண்டுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது. 
 தாளமுத்து நகர் மெயின், ராஜபாளையம், மேலஅலங்கார தட்டு, கோயில்பிள்ளை விளை, செயின்ட் மேரிஸ் காலனி, முருகன் தியேட்டர் வரையிலான சாலை குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்தும் ஏற்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டம்
ஆகையால் இந்த சாலையில் சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஒற்றைக்காலில் நின்று நொண்டியடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சங்கரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெகதீசுவரன், பி.கண்ணன், தாளமுத்துநகர் கிளை செயலாளர் துளசிராமன், உப்பு தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், சுள்ளக்கரை சுதர்சன், அம்மமுத்து, பெத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story